ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற தமிழக அணி வீராங்கனைகள்

தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழக அணி வீராங்கனைகள், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.  

News image
Updated On :3 ஜூலை 2023, 7:38 am

DIN

தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழக அணி வீராங்கனைகள், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். 
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்- 2023 போட்டி, பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் ஜூன் 12 முதல் 28 வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் விளையாடிய தமிழ்நாடு அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பின்னர் 26.6.2023 அன்று நடைபெற்ற இரயில்வே அணிக்கு எதிரான அரையிறுதியில், தமிழ்நாடு அணி 3- 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு சீனியர் பெண்கள் கால்பந்து அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, 28.6.2023 அன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஹரியானா அணியை வென்று, முதலிடம் பெற்று தங்கப் கோப்பையை வென்று
சாதனை படைத்தது.
தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பில் டி.தேவி, என்.சௌமியா, பி. தனலட்சுமி, எஸ்.கௌசல்யா, என்.லாவண்யா, எம்.பவித்ரா, பி.துர்கா, எஸ்.சண்முகப்பிரியா, எம்.சுபாஷிணி, எம். பரமேஸ்வரி, எஸ். பிரியதர்ஷினி, எம்.மாளவிகா, எம்.நந்தினி, ஏ.கார்த்திகா, கே. இந்துமதி, ஆர். வினோதினி, எஸ். ஐஸ்வர்யா, ஆர். சந்தியா, பி.சந்தியா, எஸ். சண்முகப்பிரியா, ஆர். யுவராணி, என். அம்சவள்ளி மற்றும் பயிற்சியாளர்கள் திருமதி. எஸ். கோகிலா மற்றும் திருமதி வி. கலா ஆகியோர் பங்கேற்றனர். இந்த அணியில் உள்ள 12 வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் பயிற்சி பெற்ற முன்னாள் மாணவியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்- 2023 போட்டியில் முதலிடம் பெற்று தங்க கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் தமிழ்நாடு முதல்வரை இன்றையதினம் சந்தித்து வாழ்த்துப் பெற்று, தமிழ்நாடு முதல்வருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் ‌விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் ‌விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.