தஞ்சாவூர்: மிகவும் பழைமையான பிரகன்நாயகி உடனுறை அருணஜடேஸ்வரர் ஆலயக் குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் பிரகன்நாயகி உடனுறை அருணஜடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தருமை ஆதினதிற்கு சொந்தமான இந்த ஆலயம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த ஆலயத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடமுழுக்கு பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், கடந்த 30ஆம் தேதி மன்னியாற்றிலிருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு சிறப்பு பூஜையில் நடைபெற்றது.
இதையும் படிக்க: தோஷங்களைப் போக்கும் அருணஜடேஸ்வரர்
கடந்த 3ஆம் தேதி விக்னேஸ்வரர் பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இந்த யாகசாலை பூஜையில் 59 குண்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்நிலையில் இன்று காலை எட்டாம் கால பூஜைகள் நிறைவு பெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, வாண வேடிகையுடன் நான்கு இராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த குடமுழுக்கு விழாவில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞான மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமட அதிபர் எஜமான் சுவாமிகள், சூரியனார் கோயில் சிவாக்கிர யோகிகள் ஆதீனம், வேளக்குறிச்சி ஆதீனம், செங்கோல் ஆதீனம் மதுரை ஆதீனம், நெல்லை உமையுருபாக ஆகிய ஆதீனங்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் 2 நாள்களுக்கு இரவு நேர போக்குவரத்துக்குத் தடை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


