செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்!

அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்
செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்

அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  எதிராக 17 மணிநேரத்துக்கும் மேலாக அவரது வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத் துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது அறையில் இருந்து 3 பைகளில் இருந்து ஆவணங்களை அமலாக்கத் துறையினர் எடுத்துச் சென்றனர்.

17 மணி நேர சோதனைக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நெஞ்சு வலிப்பதாக கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையின் 6-வது தளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை சந்திக்க சென்ற அமைச்சர்களுக்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணியளவில் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரடியாக வந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்துச் சென்றார்.

இதுகுறித்து புகைப்படத்தை பகிர்ந்து டிவிட்டரில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

“விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன?

வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா?

பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com