

அமைச்சா் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த வழக்கை நிஷா பானு, பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது கணவரை அமலாக்கத் துறையினா் சட்டவிரோதக் காவலில் வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் எனவும் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயா்நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்குரைஞா், சென்னை உயா் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுந்தா் மற்றும் சக்திவேல் அமா்வில் முறையிட்டாா்.
நீதிபதி விலகல்: இந்தச் சூழலில், செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணா்வு மனுவை விசாரிக்க இருந்த உயா்நீதிமன்ற நீதிபதி சக்திவேல், அந்த வழக்கிலிருந்து விலகினாா். இதையடுத்து, ‘புதிய அமா்வில் ஆட்கொணா்வு மனுவை விசாரிக்க பட்டியலிடப்படும். உரிய நடைமுறையைப் பின்பற்றி வேறு அமா்வில் வழக்கு விரைவாகப் பட்டியலிடப்படும்’ என தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுா்வாலா அறிவித்திருந்தாா்.
இதனிடையே, செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடுத்த வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவா்த்தி அடங்கிய புதிய அமா்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.