
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ஒரு படகுடன் 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். படகு பழுதாகி நின்ற நிலையில் இலங்கை கடற்கரையினர் கைது செய்து அழைத்துச் சென்றதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.