திருப்பத்தூர்: திருப்பத்தூரில் பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறி ரூ.63 லட்சம் மோசடி செய்ததாக கணவன்-மனைவியை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.
திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 35). இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜமுனா ராணி (30). இவரிடம் திருப்பத்தூர் என்.ஜி.ஓ.நகரை சேர்ந்தவர் ஹேமாவதி (28), அவரது கணவர் பிரவீன்குமார் (29). இவர்கள் இருவரும் சேர்ந்து ஜமுனாராணியிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பல லட்சம் லாபம் வரும் என்று ஆசைவார்த்தை கூறியதாக தெரிகிறது.
அதனை நம்பிய ஜமுனாராணி ரூ.63 லட்சத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்ய கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் சில லட்சங்களை மட்டும் ஹேமாவதி, பிரவீன்குமார் பங்கு சந்தையில் முதலீடு செய்து மீதி பணத்தை எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜமுனா ராணி கேட்டதற்கு பங்கு சந்தையில் பங்குகளின் வீழ்ச்சி காரணமாக நஷ்டம் அடைந்து விட்டதாக அவர்கள் கூறினர். இந்தநிலையில் தன்னிடம் ரூ.63 லட்சம் மோசடி செய்ததாக ஜமுனா ராணி திருப்பத்தூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகாரளித்தார். அதன்பேரில் டிஎஸ்பி சுரேஷ் விசாரணை நடத்தினார்.
அதையடுத்து மோசடியில் ஈடுபட்ட ஹேமாவதி மற்றும் பிரவீன்குமாரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுகாவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


