கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சினிமா பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம்: தலைமறைவான ஹரிஷ் உள்பட இருவர் கைது

சினிமா பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் தேடப்பட்டு வந்த ஹரிஷ் மற்றும் அவரது கூட்டாளியை காவல்துறையினர் கைது செய்தனர். 

News image
Updated On :5 மார்ச் 2023, 6:52 am

DIN

சினிமா பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் தேடப்பட்டு வந்த ஹரிஷ் மற்றும் அவரது கூட்டாளியை காவல்துறையினர் கைது செய்தனர். 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திரைப்பட நடிகர் வடிவேலு, பார்த்திபன், இசையமைப்பாளர் தேவா உட்பட திரைத்துறை பிரபலங்கள் சிலருக்கு ஹரிஷ் என்பவர் தலைமையிலான தனியார் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் டாக்டர் பட்டம் வழங்கினர். 

இதுதொடர்பாக சர்ச்சை ஏற்பட்டு காவல் துறையினர் ஹரிஷ்-ஐ தேடி வந்தனர். இந்நிலையில்  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியில் பதுங்கி இருந்த ஹரிஷ் மற்றும் அவரது கூட்டாளியான கருப்பையா என்பவரை சென்னை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அவர்களுக்கு ஆதரவு அளித்த ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் நடேசன் பள்ளி தெரு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி கீர்த்திகாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளில் ஆம்பூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.