திருப்பூர் மாவட்ட ஆட்சியராக தா.கிறிஸ்துராஜ் பொறுப்பேற்பு!

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக தா.கிறிஸ்துராஜ் (47) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட தா.கிறிஸ்துராஜ்
திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட தா.கிறிஸ்துராஜ்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியராக தா.கிறிஸ்துராஜ் (47) திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த எஸ்.வீனீத் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, சேலம் மாநகராட்சி ஆணையாளராகப் பணியாற்றி வந்த தா.கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. 

இந்த உத்தரவைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியராக தா.கிறிஸ்துராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் என்ற மிகப்பெரிய பொறுப்பை வழங்கியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2 நாள்களுக்கு முன்பாக புதியதாகப் பொறுப்பேற்கவுள்ள மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றோம். 

அப்போது,மாவட்ட நிர்வாகத்தை எவ்வாறு வழிநடத்திச் செல்வது என்றும், அரசின் நலத்திட்டங்களை எவ்வாறு மக்களிடம் கொண்டுச் செல்ல வேண்டும் என்று பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார். 

திருப்பூர் மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் உதவி ஆட்சியராக (பயிற்சி) பணியைத் தொடங்கினார் கிறிஸ்துராஜ், பின்னர் நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர், கரூர், கோவை மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com