சென்னை மெரினாவில் விடுமுறை நாளில் போக்குவரத்து மாற்றம்!

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை மெரினாவில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை மெரினாவில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வார இறுதி நாள்கள் மற்றும் விடுமுறை நாள்களில் மாலை நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்ணா சாலை, நேப்பியர் பாலத்திலிருந்து மெரினாவுக்கு வரும் வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளதாவது:

* காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் நேரம் வரை எவ்வித போக்குவரத்து மாற்றம் செய்யப்படமாட்டாது.

* கலங்கரை விளக்கத்திலிருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பப்பட்டு பாரதி சாலை - பெல்ஸ் ரோடு - வாலாஜா சாலை வழியாக அண்ணா சாலை சென்று தங்களது இலக்கை அடையலாம்.

* ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை X பாரதி சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு பெல்ஸ் ரோடு சென்று அண்ணா சாலை அல்லது உழைப்பாளர் சிலை வழியாக சென்று தங்களது இலக்கை அடையலாம். ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் நேராக கண்ணகி சிலைக்கு செல்ல அனுமதிக்கப்படாது.

* அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை X பெல்ஸ் சாலை சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது. (பெல்ஸ் சாலை ஓரு வழிப்பாதையாக மாற்றப்படும்)

* நேப்பியர் பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாமல் நேராக கண்ணகி சிலை சென்று வலது புறம் திரும்பி பாரதி சாலை - பெல்ஸ் ரோடு - வாலாஜா சாலை வழியாக அண்ணா சாலை சென்று தங்களது இலக்கை அடையலாம்.

* பாரதி சாலையிலிருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கவும், வாலாஜா சாலையிலிருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. (விக்டோரியா சாலை ஓருவழிப்பாதையாக மாற்றப்படும்) என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com