நாகை மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் பொறுப்பேற்பு

நாகை மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
நாகை மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் பொறுப்பேற்பு

நாகை மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த அ. அருண் தம்புராஜ் கடலூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராமநாதபுரம் ஆட்சியராக இருந்த ஜானி டாம் வர்கீஸ் நாகை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார். 

இந்த நிலையில், நாகை மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரலாற்று சிறப்புமிக்க நாகை மாவட்டத்துக்கு ஆட்சியராக பொறுப்பேற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு அரசின் அனைத்து அறிவிப்புகள் மற்றும் திட்டங்களும் பொதுமக்களிடம் சென்றடைவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.

அனைத்து துறை அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு பயனடையும் வகையில் கொண்டு செல்ல முழுமையான முயற்சிகள் எடுக்கப்படும். குடிநீர் திட்டங்கள், மீன்வளத் துறை திட்டங்கள், ஊரக வளர்ச்சித் துறை திட்டங்கள், முன்னேற விளையும் மாவட்ட திட்டங்கள் ஆகியவற்றிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். 

மாற்றுத் திறனாளிகள் துறை சார்ந்த திட்டங்கள் மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com