2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

தமிழக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :1 நவம்பர் 2023, 1:58 pm

DIN

தமிழக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன், கரோனா தொற்று பாதிப்புக் காரணமாக கோவயில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வானதி சீனிவாசனுக்கு கரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால், அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வானதி சீனிவாசனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சில நாள்களில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.