பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு!

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

News image
Updated On :3 நவம்பர் 2023, 3:38 am

DIN

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி 42% ஆக உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தற்போது 46% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறக்கூடிய திருக்கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு 46% அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் அறிவிப்பை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்யவும் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.