அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

காவிரி கரையோர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. 

News image
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த திடீர் மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பிரதான அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.
Updated On :7 நவம்பர் 2023, 5:51 am

DIN

பென்னாகரம்: காவிரி கரையோர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. 

தமிழக காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாற்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசி மணல், பிலிகுண்டு, மொசல் மடுவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் திடீர் மழை பெய்தது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்து விநாடிக்கு 2,000 கன அடியாக இருந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையினால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்து தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. 

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சிறிய அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்த போது வெளியே தெரிந்த பாறை திட்டுக்கள் தற்போது மூழ்கியுள்ளன. 

மேலும் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.