6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஓரிரு நாள்களில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை: அமைச்சர் தகவல்

10, 12 வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை தயாராக உள்ளதாகவும் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 

News image
அமைச்சர் அன்பில் மகேஸ் 
Updated On :14 நவம்பர் 2023, 1:19 pm

DIN

10,12 வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை தயாராக உள்ளதாகவும் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 

இன்று(நவ. 14) குழந்தைகள் தின விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட 114 அரசுப் பள்ளிகளுக்கு கேடயங்களையும், பல்வேறு போட்டிகளில் வென்ற 180 மாணவ - மாணவியருக்கு பரிசுப் பொருட்களையும் வழங்கும் விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், 'பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அதுகுறித்து கண்காணித்து வருகிறோம். மழை அதிகமுள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிக்கலாம் என்று கூறியிருக்கிறோம்.

இதனை ஈடுசெய்யும் பொருட்டு மழைக்காலம் முடிந்த பிறகு சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும். ஏனெனில் தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளது. 

10, 12 வகுப்பு பொதுத் தேர்வுக்கான 2-3 அட்டவணைகள் தயார் நிலையில் உள்ளன. நீட், ஜேஇஇ, கிளாட் உள்ளிட்ட மற்ற போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்கும் விதமாக அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இறுதியாக பரிசீலித்து பொதுத்தேர்வு அட்டவணை ஓரிரு நாள்களில் வெளியிடப்படும்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.