விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தேமுதிக இன்று(திங்கள்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் வழக்கமான பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தேமுதிக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்ப வேண்டாம். இது முற்றிலும் தவறான செய்தி. இதுபோன்ற வதந்திகளை நம்பவும் வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!

உசிலம்பட்டி: மின்னல் பாய்ந்து கூலித் தொழிலாளிகள் 3 பேர் பலி!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



