
டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத்.
சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத், இன்று (நவ.21) காலை அவரது இல்லத்தில் காலமானார்.
இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு நிறுவன மருத்துவமனைகளில் ஒன்றான சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனையை நிறுவியவர் பத்ரிநாத். இவருக்கு வயது (83).
இவர் பத்மபூஷன், பத்மஸ்ரீ , டாக்டர் பிசி ராய் விருது, சிவிலியன் விருது உள்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் உயர்படிப்புகளை முடித்து, இந்தியாவில் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற சேவை நோக்குடன் பத்ரிநாத் தொடங்கிய சங்கர நேத்ராலயா மருத்துவமனை பல்கிப் பெருகி இன்று நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது.
இதையும் படிக்க: பத்ரிநாத் மறைவு மருத்துவத்துறைக்கே பேரிழப்பு: முதல்வர் இரங்கல்
இவரது சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் ஏழைகளுக்கு கண்புரை அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டு வருகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...