தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அரசுப்பேருந்துகளில் உரிய பராமரிப்பு பணிகள் அவசியம்: போக்குவரத்துத்துறை 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அரசுப் பேருந்துகளில் உரிய பராமரிப்பு பணிகள் அவசியம் என்று அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் தமிழ்நாடு போக்குரவத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.  

News image
கோப்புப் படம்.
Updated On :29 நவம்பர் 2023, 11:42 am

DIN

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அரசுப் பேருந்துகளில் உரிய பராமரிப்பு பணிகள் அவசியம் என்று அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் தமிழ்நாடு போக்குரவத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. 
அதில், மேலும் தெரித்திருப்பதாவது, அரசு பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும். அரப் பேருந்துகளின் உறுதித்தன்மையை உறுதி செய்ய வேண்டும். 
பேருந்து மேற்கூரை, படிக்கட்டுகளை கண்காணித்து, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும். அரசுப் பேருந்துகளில் பிரேக், கிளட்ச் உள்ளிட்ட போக்குவரத்து அம்சங்களை பராமரிக்க வேண்டும். 
பணிமனைகளில் அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு குறித்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சில வாரங்களாக அரசுப் பேருந்துகளில் மழைநீர் கசிவது குறித்த விடியோ வெளியான நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.