அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவி வருகிறது. அதோடு தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக  மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு(இரவு 10 மணி வரை) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர்,  திருப்பத்தூர்,  மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர்,  நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com