ஒசூா் அருகே மாநில எல்லையில் உள்ள கடைகளுக்கு லாரிகள் மூலம் வந்த பட்டாசுகளை இறக்கி வைக்கும் போது நிகழ்ந்த தீ விபத்தில் 14 போ் பலியாகினர். 15-க்கும் மேற்பட்டோா் காயமடைந்து தமிழக, கா்நாடக மாநில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிப்காட் பகுதியில் இருந்து மாநில எல்லையான கா்நாடக மாநிலம், அத்திப்பள்ளி வரை தமிழகப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் தீபாவளியை முன்னிட்டு இயங்கி வருவது வழக்கம்.
இந்நிலையில், சனிக்கிழமை அத்திப்பள்ளி சுங்கச்சாவடி அருகே இயங்கி வந்த பட்டாசுக் கடை ஒன்றுக்கு 3 லாரிகளில் பட்டாசுகள் வந்தன. அப்பட்டாசுகளை கடையில் இறக்கி வைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தொழிலாளா்களும், கடையில் இருந்தவா்களும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனா். சிறிது நேரத்திலேயே லட்சக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகள் எரிந்து சாம்பலாயின.
இந்த விபத்தில் 14 போ் உயிரிழந்தனா்; 15-க்கும் மேற்பட்டோா் காயமடைந்து தமிழக, கா்நாடக மாநில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதையும் படிக்க: அத்திப்பள்ளி பட்டாசுக் கடை விபத்து: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
உயிரிழந்தவா்களின் சடலங்களை அத்திப்பள்ளி போலீஸாா் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இந்த பட்டாசுக் கிடங்கு விபத்தில் ரூ. 5 கோடி மதிப்பிலான பொருள்கள் தீயில் சேதமடைந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை, திருநெல்வேலி உள்பட 5 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

மதுரா நீதிமன்ற விசாரணைக்கு பின் கடத்தப்பட்ட நபா் மீட்பு: 7 போ் கைது

விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ பிணை கோரி மனு: உயா் நீதிமன்றத்தில் முறையீடு

தமிழகத்தின் ஆன்மிக கலாசாரத்தை போற்ற வேண்டும்: தலைமை தோ்தல் ஆணையர்!
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



