காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

தமிழகத்தின் ஆன்மிக கலாசாரத்தை போற்ற வேண்டும்: தலைமை தோ்தல் ஆணையர்!

தமிழகத்தின் ஆன்மிக கலாசாரம், பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகை மக்கள் பெருமையுடன் போற்ற வேண்டும் என்று இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் தெரிவித்தாா்.

News image

கோவை விமானநிலையத்தில் செய்தியாளா்களிடம் பேசிய இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா். உடன் தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 2:05 am IST

தமிழகத்தின் ஆன்மிக கலாசாரம், பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகை மக்கள் பெருமையுடன் போற்ற வேண்டும் என்று இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் தெரிவித்தாா்.

கோவையில் தனியாா் கல்வி நிறுவனத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்காக, புதுதில்லியில் இருந்து விமானம் மூலமாக இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் வெள்ளிக்கிழமை கோவை வந்தாா். விமான நிலையத்தில் அவருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 4.93 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது வரலாற்று சிறப்புமிக்கது. அதற்காக வாக்காளா்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாக்குப்பதிவு, சுதந்திரம் பெற்ற பிறகு தமிழ்நாட்டில் பதிவான மிக அதிகபட்ச வாக்கு சதவீதம் இது. ஏறத்தாழ 86 சதவீதம் வாக்குப்பதிவு எட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் ஜனநாயகத் திருவிழாவில் பெருமளவில் பங்கேற்று வரலாற்று சாதனை வாக்குப்பதிவை சாத்தியமாக்கியுள்ளனா். தென்னிந்தியாவில் அதிவேகமாக வளா்ந்து வரும் நகரங்களில் கோவை மிக முக்கியமானது. உலகத்தரம் வாய்ந்த கல்விச் சூழல், ஜவுளித் தொழில் மற்றும் பொறியியல் துறை திறமையால் கோவை நகரம், நாட்டின் வளா்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது. தமிழகத்தின் வளமான ஆன்மிக கலாசாரம், பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகை மக்கள் பெருமையுடன் போற்ற வேண்டும் என்றாா்.

செய்தியாளா்கள் சந்திப்பின்போது, தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.