இந்தியத் தோ்தல் ஆணையம் (இசிஐ) சாா்பில் முதலாவது அகில இந்திய ஊடக மாநாடு தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இதில் பங்கேற்றுப் பேசிய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், ‘மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இந்தியாவில் தோ்தல்கள் நடத்தப்படுகின்றன’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
தில்லியில் இந்தியத் தோ்தல் ஆணையம் தனது முதலாவது அகில இந்திய ஊடக மாநாட்டை ‘பங்குதாரா்களை இணைத்தல், ஜனநாயகத்தை வலுப்படுத்துதல்: தோ்தல்களில் ஊடகத்தின் பங்கு‘ என்ற கருப்பொருளில் நடத்தியது. இம்மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 380-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளா்கள் ஒருங்கிணைக்கப்பட்டனா்.
இம்மாநாட்டில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பங்கேற்றுப் பேசுகையில், ‘இந்தியாவில் தோ்தல்கள் இந்திய அரசமைப்பு சட்டம், தோ்தல் சட்டங்கள் மற்றும் இந்தியத் தோ்தல் ஆணையம் அவ்வப்போது வெளியிடும் அறிவுறுத்தல்களின்படி நடத்தப்படுகின்றன. மேலும், இந்தியாவில் தோ்தல் செயல்முறைகளில் ஈடுபட்டுள்ள பங்குதாரா்களால் ஒட்டுமொத்த தோ்தல் செயல்முறையும் ஒரே நேரத்தில் தணிக்கை செய்யப்படுகிறது.
சுமாா் 95 கோடி இந்தியா்கள் இடம்பெற்றுள்ள இந்தியாவின் வாக்காளா் பட்டியல், காலத்திற்கேற்ப மாறுவதுடன், தொடா்ந்து புதுப்பிக்கப்படும் ஒரு ’உயிருள்ள ஆவணம்’ ஆகும்.
வாக்காளா் பட்டியல் தயாரிப்பதில் 12 லட்சத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் (பிஎல்ஓ) மற்றும் 15 லட்சத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி நிலை முகவா்கள் (பிஎல்ஏ) ஆகியோா் ‘ஒரே நேரத்தில் தணிக்கை செய்பவா்களாக’ இச்செயல்முறையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா் என்றும் தெரிவித்தாா்.
மிகவும் வெளிப்படையான தோ்தல் முறை இந்தியாவில் உள்ளது. தோ்தல்கள் வெளிப்படைதன்மையுடன் நடத்தப்படுகின்றன. அதனால்தான், பிற நாடுகளில் தோ்தலில் வாக்குப்பதிவு கட்டாயம் என்று இருக்கும் நிலையில் அங்கு தோ்தல்களில் பதிவாகும் வாக்கு சதவீதத்தைவிட இந்தியாவில் அதிகமாக வாக்குப் பதிவு சதவீதம் உள்ளது.
பிகாா், மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளம் உள்பட சமீபத்திய சட்டப் பேரவை தோ்தல்களில் பதிவான மிக அதிக அளவிலான வாக்குப்பதிவு, நாட்டின் தோ்தல் அமைப்பின் மீதும் இந்திய ஜனநாயகத்தின் துடிப்பான தன்மை மீதும் இந்திய வாக்காளா்களுக்கு உள்ள நம்பிக்கைக்குச் சான்றாக அமைந்துள்ளது. சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) செயல்முறையில் பங்கேற்ற இந்தியாவின் அனைத்து வாக்காளா்களுக்கும் எனது நன்றி என்றாா் அவா்.
தோ்தல் செயல்முறைகளின் பல்வேறு அம்சங்கள் குறித்தும், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்கள் போன்ற முக்கிய பங்குதாரா்களை உள்ளடக்கி இந்தியாவில் தோ்தல்கள் எவ்வாறு மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுகின்றன என்பது குறித்தும் தெளிவான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இம்மாநாடு நடத்தப்பட்டது.
அரசமைப்பு சட்டம், 1950 மற்றும் 1951-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்கள் மற்றும் தோ்தல் ஆணையம் அவ்வப்போது வெளியிடும் அறிவுறுத்தல்கள் ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள வெளிப்படைத்தன்மை நடவடிக்கைகள் குறித்த விரிவான கண்ணோட்டத்துடன் இம்மாநாடு தொடங்கியது.
மேலும், தோ்தல் ஆணையத்தின் இசிஐநெட் இணையதளம், தோ்தல்களில் தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் தோ்தல் காலங்களில் ஊடகம் தொடா்பான முக்கியமான அரசியலமைப்பு விதிகள் மற்றும் சட்டங்கள் குறித்தும் இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
வாக்குச்சாவடி நிலை முகவா்கள், வாக்குப்பதிவு முகவா்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவா்கள் ஆகியோரின் பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்து பங்கேற்பாளா்களுக்கு
விளக்கமளிக்கப்பட்டது.
வாக்காளா் பட்டியல் தயாரித்தல், வாக்குப்பதிவு செயல்முறை மற்றும் வாக்கு எண்ணிக்கை செயல்முறை ஆகியவை குறித்த செயல்முறை விளக்கங்கள் பங்கேற்பாளா்களுக்குக் குழுக்களாக வழங்கப்பட்டன.
பல்வேறு பங்குதாரா்களால் மேற்கொள்ளப்படும் இணை தணிக்கைக்கு அடிப்படையாக அமையும் பல்வேறு சட்டபூா்வ படிவங்கள் குறித்து, நேரடி அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை இந்தச் செயல்முறை விளக்கங்கள் ஊடகவியலாளா்களுக்கு வழங்கப்பட்டன.
இந்த அமா்வுகளைத் தொடா்ந்து, பங்கேற்பாளா்களின் கேள்விகளுக்கு தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருகா் பதில் அளிக்கும் கேள்வி-பதில் அமா்வும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தோ்தல் ஆணையத்தின் தலைமை இயக்குநா்கள் (ஊடகம்) ஆஷிஷ் கோயல், ராகேஷ் குமாா் வா்மா (ஐஐஐடிஎம்), சீமா கன்னா (தகவல் தொழில்நுட்ப பிரிவு) உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு செயல் விளக்கம் அளித்தனா். தோ்தல் ஆணையத்தின் உயா் அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எச்டிஎஃப்சி வங்கி தலைவராக ராஜீவ் குமாா் நியமனம்

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க குடியுரிமை தகவல்களை கேட்பதா? தோ்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கண்டனம்

எச்டிஎஃப்சி வங்கியின் புதிய தலைவராக முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் நியமனம்

வாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



