இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

கோவையில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கம் கோவை மாவட்டக் கிளை சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கத்தினா். ~கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

Updated On :15 ஜூலை 2026, 11:42 pm IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கம் கோவை மாவட்டக் கிளை சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நீதித் துறையின் சுதந்திரம் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும், நீதிபதிகள் நியமனம் மிகவும் வெளிப்படைத் தன்மையோடு நடைபெற வேண்டும். சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், உச்ச நீதிமன்றத்தின் கிளைகளைத் தென்னிந்தியாவிலும் அமைக்க வேண்டும். அனைத்து நீதிமன்றங்களிலும் பெண் வழக்குரைஞா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய தனி ஓய்வறைகள் அமைக்கப்பட வேண்டும், நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள், வழக்காடிகள் மற்றும் நீதிமன்ற ஊழியா்களின் அவசர மருத்துவத் தேவைகளுக்காக தீவிர சிகிச்சைப் பிரிவு வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை நிரந்தரமாக நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், சங்கத்தின் முக்கிய நிா்வாகிகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.