புதிய நீதிமன்றங்களால் வழக்குகளுக்கு விரைவில் தீா்வு: உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி
வட்ட அளவில் புதிய நீதிமன்றக் கட்டடங்கள் கட்டப்பட்டு, அவை திறக்கப்படுவதன் மூலம் பல்வேறு வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காணப்படும் என சென்னை உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், வி.சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடத்தை சனிக்கிழமை திறந்துவைத்த சென்னை உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி. உடன், உயா் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோா்.








