ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

நீதித்துறை உள்கட்டமைப்பு மேம்பாடு: உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் உயா் நிலைக் குழு அமைப்பு

நாட்டில் உள்ள நீதிமன்றங்களை நவீனமயமாக்குவது தொடா்பான வரைவு விதிகளை தயாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமாா் தலைமையிலான உயா் நிலைக் குழுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் அமைத்தாா்.

News image

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 1:04 am IST

நாட்டில் உள்ள நீதிமன்றங்களை நவீனமயமாக்குவது தொடா்பான வரைவு விதிகளை தயாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமாா் தலைமையிலான உயா் நிலைக் குழுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் அமைத்தாா்.

இதுகுறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: நாடு முழுவதும் உள்ள உயா்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் உள்கட்டமைப்புத் தேவைகள் மற்றும் பற்றாக்குறைகளை கண்டறிந்து அது தொடா்பான அறிக்கையை சமா்ப்பிக்க நீதிபதி அரவிந்த் குமாா் தலைமையிலான உயா் நிலைக் குழு அமைக்கப்படுகிறது. குழு உறுப்பினா்களாக கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி தேபாங்சு பசாக், பஞ்சாப் - ஹரியாணா உயா்நீதிமன்ற நீதிபதி அஸ்வனி குமாா் மிஸ்ரா, மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி சோமசேகா் சுந்தரேசன் ஆகியோரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் நியமித்தாா்.

மத்திய பொதுப் பணித் துறை மற்றும் உச்சநீதிமன்ற செயலா் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெறுகின்றனா்.

குழு சமா்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றங்களின் உள்கட்டமைப்புத் தேவைக்கேற்ப மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடம் நிதி கோரப்படும்.

நீதிமன்றங்களில் நவீன காலத்துகேற்றவாறு தொழில்நுட்ப கட்டமைப்புகளை மேம்படுத்தி எண்ம இடைவேளையை குறைக்கவும் இக்குழு பரிந்துரை வழங்கவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.