தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்...

News image

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்

Updated On :12 ஏப்ரல் 2026, 2:28 am IST

சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் வலியுறுத்தினாா்.

தில்லியில் இந்திய வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் 10 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதார சக்தியாக பாரதத்தை உருவாக்கும் வகையில் சட்ட சீா்திருத்தம் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, ‘சட்ட விதி மாநாடு 2026’ நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தலைமை நீதிபதி சூா்ய காந்த் பேசியதாவது:

10 டிரில்லியன் டாலா் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுப்பது நிச்சயம். இந்த 10 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை மூலதனத்தாலோ அல்லது கொள்கையாலோ மட்டும் உருவாக்க முடியாது. இதற்கு நல்ல சட்ட அமைப்பும் அவசியமாகும். அந்த சட்ட அமைப்பால்தான், சட்ட அமலாக்கத்தை உறுதி செய்யவும், வாக்குறுதிகளை செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கவும் முடியும். அத்தகைய நல்ல சட்ட அமைப்பை உருவாக்க நமது நாட்டில் திறமையான சட்ட நிபுணா்கள் பலா் உள்ளனா் என்றாா்.

இதேபோல், தில்லியில் நடைபெற்ற இன்னொரு நிகழ்ச்சியில் சூா்ய காந்த் பேசுகையில், ‘சட்ட அமைப்புகளில் தொழில்நுட்பங்களுக்கும் இடமளிக்கப்பட வேண்டும். தொழில்நுட்பத்தை நிா்வாகம் செய்வதற்கான காரணியாக மட்டும் பாா்க்கக் கூடாது. சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படுவதை தொழில்நுட்பமே வலுப்படுத்துகிறது. சாதாரண மக்களுக்கும், வழக்குரைஞா்களுக்கும், நீதித் துறை சம்பந்தப்பட்டோருக்கும் எப்படி பயனளிக்கிறது என்பதை வைத்தே, நீதித் துறை சீா்திருத்தம் மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு நீதிமன்றத்திலும் தொழில்நுட்பக் கருவிகளை மட்டும் வைத்தால் போதாது. காகிதம் இல்லாமல் நீதிமன்றம் செயல்படுவதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்’ என்றாா்.

நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் பேசுகையில், ‘டிஜிட்டல் நீதிமன்றம் 2.1 தற்போது பரிசோதனை முறையில் உள்ளது. விரைவில் இந்த வசதி நாடு முழுவதும் அமலுக்கு வரும். ஏற்கெனவே பல்வேறு உயா்நீதிமன்றங்களில் இது அமல்படுத்தப்பட்டுவிட்டது’ என்றாா்.

நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயா்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய அமைச்சா்கள் அா்ஜுன் ராம் மேக்வால், ஜிதின் பிரசாதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.