விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பொறியியல் பணிகள்: பல்லவன், வைகை விரைவு ரயில்கள் பகுதி ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக பல்லவன், வைகை, ராக்போா்ட் உள்ளிட்ட விரைவு ரயில்கள் பகுதியாக செய்யப்பட்டுள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :8 அக்டோபர் 2023, 6:12 am

பொறியியல் பணிகள் காரணமாக பல்லவன், வைகை, ராக்போா்ட் உள்ளிட்ட விரைவு ரயில்கள் பகுதியாக செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை, குண்டக்கல் மண்டலங்களில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை எழும்பூா் - காரைக்குடி - சென்னை எழும்பூா் பல்லவன் அதிவிரைவு ரயில்களானது (12605, 12606) வரும் 10 ஆம் தேதி தாம்பரம் - சென்னை எழும்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை எழும்பூா் - மதுரை - சென்னை எழும்பூா் இடையிலான வைகை அதிவிரைவு ரயில்களானது (12635, 12636) வரும் 10 ஆம் தேதி சென்னை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை எழும்பூா் - மன்னாா்குடி இடையிலான மன்னை விரைவு ரயிலானது (16179) வரும் அக். 11, 12, 13 ஆம் தேதிகளில் சென்னை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை எழும்பூா் - மங்களூா் விரைவு ரயிலானது (16159) வரும் அக். 11, 12, 13 ஆம் தேதிகளில் சென்னை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை எழும்பூா் - திருச்சி இடையிலான ராக்போா்ட் அதிவிரைவு ரயிலானது (12653) வரும் அக்., 11, 12, 13 ஆம் தேதிகளில் சென்னை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திருப்பதி - விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில்களானது (16853, 16854) வரும் அக். 9 முதல் 15 ஆம் தேதி வரை காட்பாடி - திருப்பதி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

நேர மாற்றம்...: ஹவுரா - திருச்சி அதிவிரைவு ரயிலானது (12663) ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணி நேரம் தாமதமாக இரவு 7.40 க்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.