
ஏரியின் நுழைவில் நிறுத்தப்பட்டுள்ள போலீசார்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாமிர்த ஏரிக்குள் புதிதாக நிறுவப்பட்டுள்ள நீராழி மண்டபத்துடன் கூடிய தடாக நந்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெறவிருந்த நிலையில் அரசுத் தரப்பில் குடமுழுக்கு நடத்த அரசுத் தரப்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்,வேதாரமிர்த ஏரி 70 ஆண்டுகளுக்கு பின்னர் தூர்வாரி,தடுப்புச் சுவர்கள் படித்துறை,பூங்கா,சுற்றுலா படகு இயக்கு தளத்துடன் கூடிய கட்டுமானப் பணிகள் ரூ.9 கோடியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புத் தொடங்கி நடந்து முடிந்துள்ளது.
இதையும் படிக்க: மாயூரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்: பல்வேறு ஆதீனகர்த்தர்கள், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
இதனிடையே, ஏரியின் மையப் பகுதியில் முன்னாள் அமைச்சரும் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் தலைமையிலான திருப்பணிக் குழுவின் சார்பில் நீராழி மண்டபத்தில் 6 அடி உயரத்தில் ஒரே கல்லால் செய்யப்பட்ட நந்தி சிலையுன் கூடிய நந்தீஸ்வரர் கோயில் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளது.
இந்த கோயிலில் நாளை (திங்கள்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறவிருந்தது.
இதையடுத்து, யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை இரவு தொடங்கியது.முதல் கால பூஜை முடிந்த நிலையில் குடமுழுக்குக்கு அரசுத் தரப்பில் தடை இன்று தடை விதிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...