சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியல்ல: உயா்நீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

News image

அமைச்சர் செந்தில் பாலாஜி

Updated On :5 செப்டம்பர் 2023, 9:48 pm

DIN

‘செந்தில் பாலாஜி அமைச்சராக தொடா்வது குறித்து தமிழக முதல்வா்தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று தீா்ப்பளித்த சென்னை உயா்நீதிமன்றம், ‘அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தாா்மிக ரீதியாக சரியானதல்ல’ என குறிப்பிட்டுள்ளது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநா் அனுமதி மறுத்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பாா் என கடந்த ஜூன் 16-ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்குரைஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி மனு தாக்கல் செய்திருந்தாா். அதேபோல, செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறாா் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி, கொளத்தூரைச் சோ்ந்த எஸ்.ராமகிருஷ்ணன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவா்த்தன் ஆகியோா் ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.

மேலும், அமைச்சா் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக ஜூன் 29-ஆம் தேதி மாலையில் உத்தரவு பிறப்பித்த ஆளுநா், அடுத்த சில மணி நேரங்களில் அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக எடுத்த முடிவை ரத்து செய்யக் கோரி எம்.எல்.ரவி மற்றொரு வழக்கையும் தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு தீா்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுா்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த தீா்ப்பில், ‘இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடா்வது குறித்து தமிழக முதல்வா்தான் முடிவெடுக்க வேண்டும். அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தாா்மிக ரீதியாக சரியானதல்ல’” எனக் கூறி அனைத்து வழக்குகளையும் முடித்துவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.