ஒரு பிஸ்கட்டுக்கு ரூ. 1 லட்சம் அபராதம்!

சென்னையில் பிஸ்கட் பாக்கெட்டில் ஒரு பிஸ்கட் குறைவாக இருந்ததால், வாடிக்கையாளருக்கு ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் பிஸ்கட் பாக்கெட்டில் ஒரு பிஸ்கட் குறைவாக இருந்ததால், வாடிக்கையாளருக்கு ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை எம்எம்டிஏ மாத்தூர் பகுதியை சேர்ந்த தில்லிபாபு என்பவர் கடந்த 2021-ஆம் ஆண்டு சில்லரை விற்பனை கடையில் ஐடிசி நிறுவனம் தயாரிக்கும் ‘சன்ஃபீஸ்ட் மேரி லைட்’ பிஸ்கட் 2 பாக்கெட்டுகள் வாங்கியுள்ளார்.

அதில், 16 பிஸ்கட்டுகளுக்கு பதிலாக 15 பிஸ்கட்டுகள் மட்டுமே இருந்துள்ளது. இதுகுறித்து சில்லரைக் கடைக்காரரிடமும், ஐடிசி நிறுவனத்திடமும் முறையிட்ட தில்லிபாபுவுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் தில்லிபாபு தாக்கல் செய்த மனுவில், ஒரு பிஸ்கட்டின் விலை 75 பைசா என்றும், நாளொன்றுக்கு 50 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை தயாரிக்கும் ஐடிசி நிறுவனம் ரூ. 29 லட்சம் ஊழல் செய்வதாக புகார் அளித்தார்.

இந்த வழக்கில் வாதாடிய ஐடிசி நிறுவனம், பிஸ்கட் பாக்கெட்டுகள் எடையை வைத்துதான் கணக்கிடப்படுவதாகவும், எண்ணிக்கையை வைத்து அல்ல என்று விளக்கம் அளித்தனர்.

ஆனால், குறிப்பிட்ட பிஸ்கட் பாக்கெட்டின் எடையை நீதிமன்றன் ஆராய்ந்ததில், 76 கிராமுக்கு பதிலாக 74 கிராம் மட்டுமே இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, வழக்கு தொடர்ந்த தில்லிபாபுவுக்கு ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்கவும், குறிப்பிட்ட நாளில் தயாரிக்கப்பட்ட பிஸ்கெட்டுகளின் விற்பனையை நிறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒரு சிறிய தவறினால் ஐடிசி நிறுவனத்துக்கு ரூ. ஒரு லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com