போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 2:58 am

DIN


வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் செப்டம்பர் 18-ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், வடமேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

மேலும், இது வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசாவுக்கும் வடக்கு ஆந்திரப் பிரதேசத்துக்கும் இடையே கரையை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.