
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைப் பிரிவை வியாழக்கிழமை ஆய்வு செய்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 44 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய பாதிப்பு 64 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று மேலும் 10 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 74 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது.
நடப்பாண்டில் மட்டும் 1,205 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு புதுச்சேரியில் பாதிப்பு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் டெங்குவைக் கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதையம் படிக்க | நிபா: கோழிக்கோட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு செப். 24 வரை விடுமுறை!
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...