வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்களும் துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதையடுத்து தமிழ்நாட்டில் மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
அப்போது கூட்டத்தில் பேசிய முதல்வர், பருவமழை காலத்தில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் பேரிடர் குறித்த தகவல்கள் மக்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், நிவாரண முகாம்களில் தேவையான வசதி உள்ளதை ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குழுக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும், சேதமடைந்த சாலைகளை விரைவில் சரி செய்ய வேண்டும், மழை நீர் வடிகால் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

