அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

மதுரையில் எஸ்பிஐ வங்கிக் கிளையில் பயங்கர தீ விபத்து

மதுரையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கிளையில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :23 செப்டம்பர் 2023, 4:40 am

DIN

மதுரை: மதுரையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கிளையில் சனிக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கிளையில் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து குறித்து காவல் துறையினர், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தற்போது தீ முழுவதும் அணைக்கப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம், தீ விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.