கூட்டணி இல்லை.. கூட்டணி இல்லை.. கூட்டணி இல்லை: எடப்பாடி பழனிசாமி

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கூட்டணி இல்லை.. கூட்டணி இல்லை என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
கூட்டணி இல்லை.. கூட்டணி இல்லை.. கூட்டணி இல்லை: எடப்பாடி பழனிசாமி


சென்னை: பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கூட்டணி இல்லை.. கூட்டணி இல்லை என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அதிமுக தலைமைக் கழக செயலா்கள், மாவட்டச் செயலா்கள், கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை 3.45 மணிக்குத் தொடங்கியது. கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனையின் இறுதியில், பாஜகவுடன் கூட்டணி இல்லை, கூட்டணி இல்லை, கூட்டணி இல்லை என்று  எடப்பாடி பழனிசாமி மூன்று முறை கூறி, தங்களது முடிவை திட்டவட்டமாக அறிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜக-அதிமுக கூட்டணி தொடா்பாக இரு கட்சித் தலைவா்களும் மாறுபட்ட கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணி நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாஜக - அதிமுக கூட்டணி முறிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து அறிவித்த கே.பி. முனுசாமி, அண்ணாமலையின் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. எனவே, இன்று முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுகிறது என்றார்.

மேலும் அவர் பேசுகையில், கடந்த ஓராண்டாகவே, திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் தொடர்பாக  பாஜக விமரிசித்து வருகிறது. அதிமுக பொன் விழா மாநாட்டையும் பாஜக தலைமை விமரிசித்திருந்தது. எனவே, 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும் விருப்பத்துக்கும் மதிப்பளித்து, கூட்டணியிலிருந்து விலகுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும், இபிஎஸ் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என்றும் கே.பி. முனுசாமி அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com