பாஜகவுடன் இனி கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தது :
அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்பது தொண்டர்களின் விருப்பம். தமிழக பாஜக மாநில தலைவர், அதிமுகவையும், அண்ணா, ஜெயலலிதா போன்ற தலைவர்களையும் கடுமையாக பேசி வருகிறார்.
இதைக் கண்டித்து, பாஜக தேசிய தலைவர்களிடம் தெரிவித்தோம். இந்த சூழ்நிலையில், மீண்டும், பாஜக மாநில தலைமை, எங்களையும் எங்கள் தலைவர்களையும் தொடர்ந்து கடுமையாக விமரிசனம் செய்ததால் தொண்டர்களின் விருப்பப்படி கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அறிவித்துள்ளோம், வரும் மக்களவைத் தேர்தல், 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி கிடையாது என்பதை உறுதியாக தெரிவிக்கின்றோம்.
வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக நலன், தமிழக மக்களின் நலன் குறித்து வாக்கு சேகரிப்போம். ஒடிசா மாநில முதல்வர், தெலங்கானா மாநில முதல்வர் ஆகியோரை போன்று மக்களின் நலன் குறித்து பேசி வாக்கு சேகரிப்போம். மக்களவையில் தமிழகத்திற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்.
கடந்த ஒன்பது ஆண்டு பாஜக ஆட்சியில் செய்த நல்லதை பாராட்டிய நாங்கள், தமிழகத்திற்கு செய்ய மறந்ததையும், ஒன்பது ஆண்டு கால ஆட்சியின் தவறுகளையும் விமரிசனம் செய்வோம்.
பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டோம் என நாங்கள் அறிவித்த நிலையில் திமுகவிற்கு பயம் வந்துவிட்டது.
கடந்த காலங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எங்கள் கூட்டணியில் இருந்துள்ளன. திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அதற்கு காலம் பதில் சொல்லும் என்றார் அவர்.
இதையும் படிக்க | ஒரே நாடு, ஒரே தேர்தல்: மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை?
இந்த நிகழ்வின் போது கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் கே அசோக்குமார் எம் எல் ஏ, தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.