முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரசாரம்!

முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய ராகுல் காந்தி வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி தமிழகம் வருகை தரவுள்ளார்.

தமிழகத்தில் நடைபெறும் 2 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க ராகுல் காந்தி திட்டமிட்டு இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன்னதாக தெரிவித்திருந்தார்.

திருநெல்வேலி, விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர்கள், தென்காசி, தூத்துக்குடி திமுக வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இதனிடையே, கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் ராகுல் காந்தி பங்கேற்று பேசுகிறார்.

கோப்புப்படம்
வாக்கு சேகரிப்பில் இரட்டை மாட்டு வண்டியிலிருந்து விழுந்த தேமுதிக வேட்பாளர்!

இந்த நிலையில், வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை செட்டிபாளையத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com