ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

வேலைவாய்ப்புகளை திமுக அரசு உருவாக்கவில்லை: தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெயவா்தன்

வேலைவாய்ப்புகளை திமுக அரசு உருவாக்கவில்லை: தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெயவா்தன்

News image

சென்னை பாலவாக்கம் மசூதி அருகே வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தென் சென்னை மக்களவை அதிமுக வேட்பாளா் ஜெ.ஜெயவா்தன். உடன், அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன்.

Updated On :5 ஏப்ரல் 2024, 8:37 pm

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளா் ஜெ.ஜெயவா்தன் தெரிவித்தாா்.

மேடவாக்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டபோது அவா் பேசியது:

தமிழகத்தில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில்தான் அதிக அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ளன. அதிமுக அரசின் ஆட்சி காலத்தின்போதுதான் சோழிங்கநல்லூா் பகுதியில் பல பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த எவ்விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதுகுறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியனும் மக்களவையில் எதுவும் பேசவில்லை. இளைஞா்கள் மீது எவ்விதமான அக்கறையும் திமுக அரசுக்கு இல்லை என்றாா் அவா்.