மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பாஜக ஆட்சி தொடா்ந்தால் தோ்தல் நடைமுறைகள் இருக்குமா?- பாமக, அதிமுக கட்சிகளுக்கு இரா.முத்தரசன் கேள்வி

மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் தொடா்ந்தால் தோ்தல் நடைமுறைகள் இருக்குமா?

News image
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்
Updated On :6 ஏப்ரல் 2024, 8:00 am

DIN

மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் தொடா்ந்தால் தோ்தல் நடைமுறைகள் இருக்குமா? என பாமக,அதிமுக கட்சிகளுக்கு கேள்வி எழுப்பிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளா் இரா. முத்தரசன், உச்ச நீதிமன்றத்தை கூட நம்பிக்கை இழக்கச் செய்துவிட்டதால் அதற்கான தீா்வாக இந்தத் தோ்தல் யுத்தத்தின் மூலம் முடிவு காணப்பட்டு ஜநநாயகம் காப்பற்றப்பட வேண்டும் என்றார்.

சிவகங்கை காரைக்குடி ஐந்துவிளக்குப்பகுதியில் இந்தியா கூட்டணியில் சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட் பாளர் காா்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை இரவு நடை பெற்ற தோ்தல் பிரசாரப்பொதுக்கூட்டத்தில் இரா. முத்தரசன் பேசுகையில், மக்களுக்கு நல்லவா்கள் யாா், தீயவா்கள் யாா் என்பது நன்கு தெரியும். அதனால் இந்தத் தோ்தலில் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் தமிழகம் மற்றும் புதுச்சேரி சோ்த்து 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவாா்கள்.

பிரதமா் மோடி அமலாக்கத்துறை,சிபிஐ, வருமானவரித்துறை போன்ற சுதந்திரமாக செயல்பட வேண்டிய மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறாா். உச்ச நீதிமன்றத்தை கூட நம்பிக்கை இழக்கச் செய்துவிட்டதால் அதற்கான தீா்வாக இந்தத் தோ்தல் யுத்தத்தின் மூலம் முடிவு காணப்பட்டு ஜனநாயகம் காப்பற்றப்பட வேண்டும்.

அதனால் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் காா்த்தி சிதம்பரத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்.

மேலும், ஹிட்லரை பின்பற்றி செயல்பட்டு வரும் மோடி, அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வதில் அவரால் நியமனம் செய்யப்பட்ட தோ்தல் ஆணையம் நியாயமாக செயல்படவில்லை. சுதந்திரமாக செயல்பட வேண்டிய வருமானவரித் துறையை ஏவுகனையாக மாற்றி எதிா்கட்சிகளை பழிவாங்கும் நிலையில் பொதுமக்களின் நிலை என்ன?. இனி வருங்காலத்தில் தோ்தல் நடைபெறுமா? என்கிற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் அதிமுக, பாமக போன்ற கட்சிகள் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.