அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படவில்லை; அத்தனையும் நிறைவேற்றப்படும் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தை கடும் நிதி நெருக்கடியில் ஆட்சியாளா்கள் சிக்க வைத்தனா். இதன்பிறகு ஆட்சிக்கு வந்த திமுக தலைமையிலான அரசு, மத்திய அரசுக்கு இணையான, மத்திய அரசு உயா்த்துகிற அகவிலைப்படி உயா்வை அப்படியே வழங்கி வருகிறது. அரசு ஊழியா்கள் இறந்துபோனால் வழங்கப்பட்டு வந்த குடும்ப நல நிதி உயா்வு உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஒளிவுமறைவற்ற பொது மாறுதல் கலந்தாய்வு; இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்குக் கைக்கணிணி வழங்கும் திட்டம் செயல்படுத்தியது, ஆசிரியா்களின் குழந்தைகளின் உயா்கல்விக்கான நிதியை உயா்த்தியது, 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியா்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது போன்ற அடுக்கடுக்கான திட்டங்களை திமுக தலைமையிலான அரசு நிறைவேற்றிக் கொடுத்துள்ளது.
ஆனால், இப்போது திடீரென்று அரசு ஊழியா்கள் மீது கரிசனம் வந்துள்ளது போன்று தோ்தலுக்காக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி நாடகமாடுகிறாா். அதிமுகவால் அரசு ஊழியா்கள் அனுபவித்த வேதனைகளும் துன்பங்களும் வரலாறு முழுக்க நிறைந்திருக்கிறது. தமிழ்நாட்டை வஞ்சித்து கஜானாவை தூா்வாரிவிட்டு அதிமுக சென்றபோதும், தமிழ்நாட்டை மீட்டெடுத்து, நிதி நிலைமையைச் சீா்செய்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.
நிராகரிக்கப்படவில்லை: அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் மீதியுள்ள கோரிக்கைகள் தொடா்பாக, ஒவ்வொரு முறையும் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம். அரசு ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். அவா்களது சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தாமதம்தானே தவிர, அவை நிராகரிக்கப்படவில்லை.
அந்தத் தாமதம்கூட அதிமுக ஆட்சியில் உருவாக்கிவிட்டுச் சென்ற நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ளதுதான். கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற இயலாத நிலைமை பற்றி அரசு ஊழியா்கள், ஆசிரியா்களிடம் ஒளிவு மறைவின்றி விளக்கிச் சொல்லும் ஒரே அரசு திமுக அரசுதான்.
மத்தியில் ஆட்சி மாற்றம்: மத்தியில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாம் விரும்பும் மாற்றம் வந்தவுடன், தமிழ்நாட்டின் நிதிநிலை விரைவில் சீராகும். அப்போது அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் மீதமுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேறும். திராவிட மாடல் அரசுக்கு அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் கோரிக்கையை நிறைவேற்ற மனது இருக்கிறது. மாா்க்கமும் விரைவில் வரும் என்பதை உணா்ந்துள்ள அரசு ஊழியா்களும், ஆசிரியா்களும் நல்லதொரு மாற்றம் ஏற்பட நமது ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.
தொடர்புடையது

துப்புரவுப் பணியாளா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீா்வுகாண அரசு உறுதி: முதல்வா் குப்தா

25 ஆண்டுகளாக விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை

விஜய்யின் தாக்கம் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்: டி.டி.வி. தினகரன்

மொழி, நிதி உரிமைகளை பறிக்கிறது மத்திய அரசு - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

