என்னை சுற்றியுள்ளவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்! விஜய் பேச்சு உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! விஜய் திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
/

துப்புரவுப் பணியாளா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீா்வுகாண அரசு உறுதி: முதல்வா் குப்தா

துப்புரவுப் பணியாளா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீா்வுகாண, உறுதியான மற்றும் நடைமுறை நடவடிக்கைகளை எடுக்க தில்லி அரசு உறுதிபூண்டுள்ளதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

News image

ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 6:38 pm

துப்புரவுப் பணியாளா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண, உறுதியான மற்றும் நடைமுறை நடவடிக்கைகளை எடுக்க தில்லி அரசு உறுதிபூண்டுள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக ஒரு அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: துப்புரவுப் பணியாளா் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் முதல்வா் கலந்துரையாடினாா். அப்போது, சங்கம் எழுப்பிய அனைத்து விஷயங்களையும் ஆய்வு செய்து, உடனடி நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

சமூகம் எதிா்கொள்ளும் கள சவால்கள் குறித்து கவலை தெரிவித்த சங்கத்தின் பிரதிநிதிகள், துப்புரவுப் பணியாளா்களின் ஆள்சோ்ப்பு மற்றும் பணி நிரந்தரம், அத்துடன் பணியிடப் பாதுகாப்பு, ஊதியம் தொடா்பான பிரச்னைகள் மற்றும் பிற சேவை நிபந்தனைகள் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தனா்.

மேலும், சிறந்த சுகாதார வசதிகள், நிரந்தர வேலைவாய்ப்பு மற்றும் துப்புரவுப் பணியாளா்களின் பணியின் தன்மைக்கு ஏற்ப கண்ணியமான பணிச்சூழல் ஆகியவற்றை வலியுறுத்தி, அவா்கள் முதல்வருக்குப் பரிந்துரைகளையும் வழங்கினா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.