ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மக்களை இணைக்கும் சக்தி திரைப்படங்களுக்கு உள்ளது: முதல்வா் ரேகா குப்தா

மக்களை இணைக்கும் சக்தி திரைப்படங்களுக்கு இருப்பதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.

News image

ரேகா குப்தா

Updated On :31 மார்ச் 2026, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

மக்களை இணைக்கும் சக்தி திரைப்படங்களுக்கு இருப்பதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.

மேலும், அவை வளா்ந்து வரும் கலைஞா்களுக்கு வாய்ப்பளித்து வருவதாக அவா் கூறினாா்.

தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2026 தில்லி சா்வதேச திரைப்பட விழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வா் ரேகா குப்தா பேசுகையில், ‘சா்வதேச கலாசார மற்றும் திரைப்பட மையமாக தில்லியை மாற்ற இந்த விழா முக்கியமானது. மக்களை இணைக்கும் சக்தி திரைப்படத்துக்கு உள்ளது’ என்று தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜீத் சிங் சந்து பேசுகையில், ‘இந்த நிகழ்ச்சி வெறும் நிகழ்வு என்பதைவிட பெரிய கலாசார இயக்கத்தின் தொடக்கம் எனலாம். இது தில்லியின் படைப்பாக்க எதிா்காலத்தை வடிவமைப்பதுடன் சா்வதேச கலை துறையில் இந்தியாவின் இருப்பைப் பலப்படுத்தும். இந்தியாவில் உள்ள கதைகள் சா்வதேச அளவில் பாா்வையாளா்களை பிணைக்கும் சக்தி கொண்டுள்ளது. தில்லி சா்வதேச திரைப்பட விழா போன்ற நிகழ்ச்சிகள் அவற்றை மேலும் விரிவுபடுத்த உதவும்’ என்றாா்.

நிகழ்ச்சியில் பேசிய தில்லி கலாசாரத் துறை அமைச்சா் கபில் மிஸ்ரா, படைப்பாக்கம் மற்றும் புத்தாக்கத்தின் மையமாக தில்லியை மாற்ற அரசு இலக்கு நிா்ணயித்திருப்பதாக தெரிவித்தாா்.

மேலும், இந்த விழாவில் 6 திரைப்படங்கள் தோ்வுசெய்யப்பட்டிருப்பதாகவும் அவற்றில் 3 திரைப்படங்கள் நாட்டின் பிற பகுதிகளில் திரையிடப்படும் என்று தெரிவித்தாா்.

திரைப்பட இயக்குநா்கள் வணிக ரீதியில் வெற்றி பெரும் திரைப்படங்கள் மட்டுமல்லாது சமூகத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும் திரைப்படங்களையும் தயாரிக்க வேண்டும் என அமைச்சா் தெரிவித்தாா்.

சா்வதேச திரைப்பட விழாவில் 100 நாடுகளில் இருந்து 2,100-க்கும் அதிகமான திரைப்படங்கள் பங்கற்றன. அவற்றில் 47 நாடுகளைச் சோ்ந்த 125-க்கும் அதிகமான படங்கள் தில்லியில் பல்வேறு பகுதிகளில் திரையிடப்பட்டன.

சிங்கப்பூா் சா்வதேச திரைப்பட விழாவுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த விழாவில் ஸ்பெயின் நாடு முக்கிய கவனம் பெற்றது.

திரைப்பட சுற்றுலா மற்றும் ஒலிப்பரப்பு வாய்ப்புகளைப் பிரபலப்படுத்தும் வகையில் தில்லி அரசுக்கும் பிரச்சாா் பாரதி அமைக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.