சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தமிழகத்தில் இதுவரை ரூ.82 கோடி ரொக்கம் பறிமுதல்

தமிழகத்தில் இதுவரை ரூ.82 கோடி ரொக்கம் பறிமுதல்

News image
Updated On :6 ஏப்ரல் 2024, 5:18 pm

தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.82.63 கோடி ரொக்கத் தொகை இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்ட மதுபானங்கள், போதைப் பொருள்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.192.67 கோடி என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சனிக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.82.63 கோடி ரொக்கமும், ரூ.4.34 கோடி மதிப்பிலான மதுபானங்களும், ரூ.84 லட்சம் மதிப்புடைய போதைப் பொருள்களும், ரூ.89.41 கோடி மதிப்பிலான ஆபரணங்களும், ரூ.15.43 கோடி மதிப்புடைய பரிசுப் பொருள்களும் பறிமுதல் ஆகியுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.192.67 கோடி என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.