மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஏப். 12-ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா!

தேர்தல் பிரசாரத்திற்காக அமைச்சர் அமித் ஷா ஏப். 12-ல் தமிழகம் வருகிறார்.

News image
அமித் ஷா- கோப்புப்படம்
Updated On :10 ஏப்ரல் 2024, 12:05 pm

DIN

மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக உள்துறை துறை அமைச்சர் அமித் ஷா வரும் ஏப். 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார்.

அமைச்சர் அமித் ஷா ஏப். 12 ஆம் தேதி சிவகங்கை மற்றும் மதுரையில் வாகனப் பேரணி மூலம் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து, ராஜராஜேஸ்வரி கோயில், பைரம் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களில் தரிசனம் செய்யவுள்ளார்.

கன்னியாகுமரியில் ஏப். 13 ஆம் தேதி பிரசாரத்தில் ஈடுபடும் அமித் ஷா, அன்று மாலை நாகப்பட்டினத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

இதனைத் தொடர்ந்து, தென்காசியில் நடைபெறும் வாகனப் பேரணியிலும் அமித் ஷா பங்கேற்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அமைச்சர் அமித் ஷா ஏப். 4, 5 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தெரிவித்திருந்த நிலையில், அவரின் வருகை சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.