தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பொறுப்பேற்ற 100 நாள்களுக்குள்... அண்ணாமலை வாக்குறுதி

நல்ல ஆட்சி ஏற்படுத்துவதற்காக இப்போது அதே அரசியலில் உங்கள் முன்பு நிற்கிறேன்.

News image
Updated On :10 ஏப்ரல் 2024, 3:58 pm

DIN

கோவையில் மக்கள் அனைவரும் தனக்காக வேட்பாளராக மாற வேண்டும் என கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும் தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை தெரிவித்தார்.

கோவையில் பிரசாரத்தில் ஈடுபட்டு பேசிய அவர், அரசியலைத் தாண்டி என் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மோடியின் முகத்துக்காக வாக்களிப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

அரசியல் சாக்கடை என நினைத்தவன் நான். நல்ல ஆட்சி ஏற்படுத்துவதற்காக இப்போது அதே அரசியலில் உங்கள் முன்பு நிற்கிறேன்.

கோவையில் அடிப்படை பிரச்னைகள் நிறைய உள்ளன. பாஜக வெற்றி பெற்றால் அவை படிப்படியாக நிவர்த்தி செய்யப்படும். நேர்மையான ஏழை மக்களுக்கான ஆட்சியை செலுத்த வேண்டும் என்ற தெளிவுடன் இருக்கிறேன்.

நீங்கள் எனக்காக வாக்காளராக மாற வேண்டும். என் சார்பாக குடும்பத் தலைவிகள் தங்கள் இல்லங்களில் தாமரைக்கு ஓட்டு சேகரிக்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகள் உங்கள் குழந்தைக்கு நான் பொறுப்பு. உங்கள் குழந்தைக்கு நல்ல சமூதாயத்தை உருவாக்க வேண்டியது எங்கள் பொறுப்பு.

சமூதாயத்தில் கஞ்சா என்ற வார்த்தையே இருக்கக்கூடாது. ஜுன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்ததும், அடுத்த 100 நாள்களுக்குள் போதைபொருள் தடுப்பு மையம் கோவையில் ஏற்படுத்தப்படும். இது என் வாக்குறுதி.

2047-ல் இந்தியா முதன்மை நாடாக மாறும். அந்த சமுதயாத்தில் உங்கள் குடும்பம் அமைதியாக வாழும்.

மக்கள் எந்த சாலையில் சென்றாலும் தாமரை நோக்கி செல்ல வேண்டும். செல்போனில் ஹலோ என்று சொல்வதை விட, தாமரை வணக்கம் எனக் கூறுவோம். கோவையில் ஜுன் 4ம் தேதி கோவையிலும் தாமரை மலரந்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும் என அண்ணாமலை பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.