மக்களவைத் தேர்தல்: திரையரங்க ஊழியர்களுக்கு விடுமுறை

மக்களவைத் தேர்தல்: திரையரங்க ஊழியர்களுக்கு விடுமுறை

மக்களவைத் தேர்தல் நாளன்று திரையரங்க ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு பிரசாரம் நடைபெற்று வருகின்றது.

மக்களவைத் தேர்தல் நடைபெறும் வரும் ஏப். 19 ஆம் தேதியன்று பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறும் நாளான வெள்ளிக்கிழமை(ஏப்.19) கடைகள் மற்றும் தனியாா் நிறுவன ஊழியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல்: திரையரங்க ஊழியர்களுக்கு விடுமுறை
புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு நாளை இயங்காது: ஜிப்மர் நிர்வாகம்

மேலும், விடுமுறை அளிக்காத நிறுவனங்களை கண்காணிக்கும் பொருட்டு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் வரும் ஏப். 19 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com