ராகுல் காந்தி வருகை: 3 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

ராகுல் காந்தி வருகையையொட்டி, நெல்லையில் 3 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணி சாா்பில் திருநெல்வேலி உள்பட தென் தமிழக பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்ய ராகுல் காந்தி நெல்லை வருகை தரவுள்ளார்.

பாளையங்கோட்டை பெல் திடலில் ஏப்.12 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று பேசுகிறார்.

ராகுல் காந்தி
தேர்தலை புறக்கணிக்கும் பரந்தூர் மக்களுடன் பேச்சுவார்த்தை: சாகு

இதற்காக ஹெலிகாப்டா் மூலம் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளி திடலில் இறங்கும் அவர், அங்கிருந்து கார் மூலம் பொதுக்கூட்ட திடலை அடைகிறார்.

இந்த நிலையில், நெல்லையில் நாளை(ஏப். 11) காலை 6 மணி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி காலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com