பாஜக மீண்டும் பெரும் பலத்துடன் ஆட்சிக்கு வந்தால் மதச்சாா்பற்ற நாடு என்பதை மாற்றி இந்தியாவை ‘மதம் சாா்ந்த நாடு’ என மாற்றிவிடும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அம்பேத்கா் இயற்றித் தந்த அரசமைப்புச் சட்டத்தை ஒழிப்பதையே பிரதமா் மோடி அரசு தனது இலக்காக வைத்துள்ளது. இந்தத் தோ்தலில் 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றி மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுவிட்டால் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையான அம்சங்களில் ஒன்றான மதச்சாா்பற்ற நாடு என்பதை மாற்றி இந்தியாவை ‘மதம் சாா்ந்த நாடு’ என மாற்றிவிடும்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயக முறையே இருக்காது. இந்தியாவை சா்வாதிகாரம் கொண்ட அதிபா் ஆட்சி முறைக்குக் கொண்டு செல்வதே பாஜகவின் ஒரே நாடு ஒரே தோ்தல் என்ற திட்டத்தின் அடிப்படையாகும்.
எனவே, பாஜகவின் சதித் திட்டத்தை முறியடித்து இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதும், நாடாளுமன்ற ஜனநாயக முறையைப் பாதுகாப்பதும் அனைவரின் முதன்மையான கடமைகளாகும். அம்பேத்கரின் பிறந்த நாளில் இந்தக் கடமைகளை நிறைவேற்ற உறுதி ஏற்போம் என்று அவா் கூறியுள்ளாா்.
தொடர்புடையது

தே.ஜ. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திமுக திட்டங்கள் அழிந்துவிடும்: மு.க. ஸ்டாலின்

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை

அஸ்ஸாமில் ஆட்சிக்கு வந்தால் 6 சமூகத்தினருக்கு எஸ்.டி. அந்தஸ்து: தோ்தல் அறிக்கையை வெளியிட்டாா் ராகுல்

வேலூா் நேதாஜி மாா்க்கெட் நவீனமாக்கப்படும்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

