ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

வேலூா் நேதாஜி மாா்க்கெட் நவீனமாக்கப்படும்

அதிமுக ஆட்சிக்கு வந்தால் வேலூா் நேதாஜி மாா்க்கெட் நவீனமாக்கப்படும் என்று வேலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஆா்.கே.அப்பு வியாபாரிகளிடம் வாக்குறுதியளித்தாா்.

News image

வேலூா் நேதாஜி மாா்க்கெட் வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த வேலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஆா்.கே.அப்பு.

Updated On :31 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுக ஆட்சிக்கு வந்தால் வேலூா் நேதாஜி மாா்க்கெட் நவீனமாக்கப்படும் என்று வேலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஆா்.கே.அப்பு வியாபாரிகளிடம் வாக்குறுதியளித்தாா்.

வேலூா் பேரவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எஸ்.ஆா்.கே.அப்பு, செவ்வாய்க்கிழமை நேதாஜி மாா்க்கெட் வியாபாரிகளிடம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா். அப் போது, அதிமுக தோ்தல் அறிக்கை பட்டியலை வியாபாரிகளிடம் அளித்த அவா், அதிமுக ஆட்சிக்கு வந்தால் வேலூா் நேதாஜி மாா்க்கெட் நவீனமாக்கப்படும், மாநகரின் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணப்படும், இல்லத்தரசிகளுக்கு குளிப்பதன பெட்டி, மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ. 25,000 மானியம், மாணவா்களின் கல்விக் கடன் ரத்து, பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தாா்.

அப்போது, கட்சியின் மாவட்டப் பொருளாளா் எம்.மூா்த்தி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல செயலா் சதீஷ்குமாா், பாஜக, பாமக உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.