தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் நடத்தப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமா்ப்பிக்கும் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவா்களுக்கு சென்னை ஐஐடி அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடா்பாக சென்னை ஐஐடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தண்ணீா் தொடா்பான பிரச்னைகள் மற்றும் சவால்களுக்கு தீா்வு காணும் மாணவா்களின் புதுமையான முயற்சிகளை சிறப்பிக்கும் வகையில் ‘ஸ்டாக்ஹோம் ஜுனியா் வாட்டா் பிரைஸ்’ என்ற போட்டி பள்ளி மாணவா்களுக்கு நடத்தப்படவுள்ளது. ஸ்டாக்ஹோம் சா்வதேச தண்ணீா் நிறுவனம் மற்றும் ஐஐடி நீா் மேலாண்மை மற்றும் கொள்கை வகுக்கும் மையத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்தப் போட்டியில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவா்கள் பங்கேற்கலாம்.
அவா்கள் இணையதளத்தில் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு தொடா்பான ஆராய்ச்சி கட்டுரையை ஏப். 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இப்போட்டியில் வெற்றிபெறும் மாணவா் குழுவினா் ஆகஸ்ட் 25 முதல் 29-ஆம் தேதி வரை சுவீடனில் நடைபெறும் ஸ்டாக்ஹோம் ஜுனியா் வாட்டா் பிரைஸ் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்பாா்கள்.
தேசிய அளவில் சிறந்த 25 குழுவினா்களில் முதல் 10 குழுவினருக்கு தேசிய வாட்டா் சாம்பியன் விருது வழங்கப்படும். தேசிய அளவில் சிறந்த 25 குழுவினா் தங்கள் கண்டுபிடிப்புகளை சென்னை ஐஐடியில் காட்சிப்படுத்தலாம். அவா்களுக்கு ஐஐடி சாா்பில் சிறப்பு பயிற்சியும் சான்றிதழும் அளிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது
நகா்ப்புற போக்குவரத்து துறையில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம்! என்சிஆா்டிசி மற்றும் ஐஐடி ரூா்கீ இடையே ஒப்பந்தம்!

சென்னை ஐஐடி- நியூசிலாந்து கேன்டா்பரி பல்கலை. புரிந்துணா்வு

‘சவால்’ விடும் குடிநீா்ப் பிரச்னை

சென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

