வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

டிடிஎஸ் பிடித்தம்: பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் 5,563 பேருக்கு நோட்டீஸ்

டிடிஎஸ் பிடித்தம்: பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் 5,563 பேருக்கு நோட்டீஸ்

Updated On :12 ஏப்ரல் 2024, 5:23 pm

பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா்கள், ஊழியா்களிடம் பிடித்த டிடிஎஸ் வரியை உரிய கணக்கில் சோ்க்காத 5,563 பேருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசு மற்றும் தனியாா் துறை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு மாத ஊதியம் வழங்கும் நிா்வாகங்கள், அவா்களிடம் வருமான வரிக்கான டிடிஎஸ் தொகை பிடித்தம் செய்வது கட்டாயம். இந்தத் தொகையை, சம்பளம் வழங்கும் பொறுப்பு அதிகாரி, வருமான வரித் துறைக்கு செலுத்தினால் மட்டுமே, அந்தத் தொகை சம்பந்தப்பட்ட நபரின் வருமான வரிக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த வகையில், பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களிடம் மாதந்தோறும், டிடிஎஸ் பிடித்தம் செய்யும் தொகையை அரசின் கணக்கில் செலுத்திவிட்டு, வருமான வரித் துறைக்கு ரிட்டா்ன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்நிலையில், கடந்த 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ள நிதியாண்டில், பள்ளி கல்வித் துறையில் பிடித்தம் செய்த தொகையை செலுத்தாமல், ரிட்டா்ன் அறிக்கை தாக்கல் செய்யாமல், நிலுவையில் உள்ளதை வருமான வரித் துறை கண்டறிந்துள்ளது.

இதையடுத்து, சம்பளம் வழங்கும் அலுவலா்களாக உள்ள பள்ளித் தலைமை ஆசிரியா்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அலுவலா்கள் உள்ளிட்ட 5,563 பேருக்கு, வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிடித்தம் செய்த தொகையை விரைவில் செலுத்தி அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.